சுடச்சுட

  

  குத்துச்சண்டை போட்டியில் பாவை வீரர்களுக்கு சாம்பியன் பட்டம்

  By ராசிபுரம்,  |   Published on : 23rd December 2016 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாநில அளவிலான அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி அண்மையில் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
   இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 80 கல்லூரிகளிலிருந்து 300-க்கு மேற்பட்ட மாணவர்களும், பெண்கள் பிரிவில் 30 கல்லூரிகளிலிருந்து 100-க்கு மேற்பட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.
   போட்டியில் ஆண்கள், பெண்களுக்கு 10 எடைப் பிரிவுகளில் குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. பெண்கள் பிரிவில் 6 தங்கமும், 1 வெள்ளியும் பெற்று பாவை பொறியியல் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், ஆண்கள் பிரிவில் 5 தங்கமும், 3 வெள்ளியும் பெற்று பாவை பொறியியல் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.
   தங்கம் வென்ற வீரர்களும், வீராங்கனைகளும் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அண்ணா பல்கலைக்கழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.
   இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, கல்லூரியின் முதல்வர் எம்.பிரேம்குமார், உடற்கல்வி இயக்குனர் என்.சந்தானராஜா, பயிற்சியாளர் சக்திவேல் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, பதக்கம், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai