சுடச்சுட

  

  கொப்பரைத் தேங்காய் ரூ. 65 ஆயிரத்துக்கு ஏலம்

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 23rd December 2016 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 65 ஆயிரத்துக்குக் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
   பரமத்தி வேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
   இங்கிருந்து பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொப்பரைத் தேங்காயை விவசாயிகள் ஏலத்துக்குக் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 673 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 72.16-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 62.89-க்கும் ஏலம் போனது.
   நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சுமார் 1,110 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 68.85 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 62.85-க்கும், சராசரியாக ரூ.64.65-க்கும் ஏலம் போனது.
   மொத்தம் ரூ.65 ஆயிரத்து 83-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
   கடந்த வாரத்தை விட நிகழ்வாரம் கொப்பரைத் தேங்காயின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai