சுடச்சுட

  

  சரக்கு ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: கோழித் தீவன விற்பனை முகவர்கள் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 23rd December 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சரக்கு ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை தீவன மூலப்பொருள்கள் விற்பனை முகவர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   இச்சங்கத் தலைவர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள், நாமக்கல்லில் கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:
   தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் கோழித் தீவனத்துக்கு உண்டான மூலப்பொருள்கள் கிடைக்கவில்லை. இதனால் மூலப்பொருள்களை வடமாநிலங்களில் இருந்து வாங்க வேண்டியுள்ளது. இந்தப் பொருள்கள் அனைத்தும் ரயில் மூலம் இறக்க வேண்டியுள்ள நிலையில், நாமக்கல் ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் இறக்குவதற்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
   ஆனால், மத்திய அரசு ரயில் மூலம் கொண்டு வரும் கோழித்தீவன மூலப்பொருள்களை ஒரே வாடகையில் இரு இடங்களில் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
   அதேபோல் சரக்கு ரயில் கட்டணமும் அதிகமாக உள்ளதால், கோழிப் பண்ணையாளர்கள், வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழித்தீவன மூலப்பொருட்கள் இலங்கை சென்று பின், தூத்துக்குடிக்கு வருவதால் காலவிரயமும், பொருள்செலவும் ஏற்படுகின்றன.
   எனவே கோழிப் பண்ணையாளர்களின் நலனுக்காகவும், வியாபாரிகளுக்காகவும் கட்டணத்தைக் குறைக்கவும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரடியாக தீவன மூலப்பொருள்களைக் கொண்டுவரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலர் ராஜவேல், துணைத் தலைவர்கள் கண்ணன், ஞானம், துணை செயலர் குப்புசாமி, பொருளாளர் சின்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai