சுடச்சுட

    

    சேந்தமங்கலம் புதிய பேருந்து நிலையம் 15 நாள்களில் செயல்படும்: எம்எல்ஏ உறுதி

    By நாமக்கல்  |   Published on : 23rd December 2016 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேந்தமங்கலம் புதிய பேருந்து நிலையம் இன்னும் 15 நாள்களில் செயல்பட தொடங்கும் என எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் உறுதியளித்தார்.
     சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்களிடம் அவர் வியாழக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார். தெருவிளக்கு, குடிநீர், கழிப்பிடம், நியாயவிலைக் கடை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், ஆய்வு செய்து தேவையின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
     முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறந்த பேருந்து நிலையத்தில், சில பணிகள் இன்னும் முடியவில்லை. இன்னும் 15 நாள்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பேருந்து நிலையத்திற்குள், பேருந்துகள் சென்று வர அனுமதிக்கப்படும் என்றார்.
     மேலும் சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் 79 பேருக்கு ரூ. 66.04 லட்சம் மதிப்பிலான பயிர்க் கடனை எம்எல்ஏ வழங்கினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai