சுடச்சுட

  

  தடகளப் போட்டி: செல்வம் கல்லூரி மாணவர்கள் சாதனை

  By நாமக்கல்,  |   Published on : 23rd December 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
   பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான 2016-2017 ஆம் கல்வியாண்டிற்குரிய 19வது தடகளப் போட்டி ஒசூரில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் 60 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 223 புள்ளிகளுடன் தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆண்கள் பிரிவில் 145 புள்ளிகளுடன் தொடர்ந்து 13 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். இதுபோல், பெண்கள் பிரிவில் 78 புள்ளிகளுடன் 13 ஆண்டுகள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பொ.செல்வராஜ், செயலர் கவீத்ரா நந்தினி பாபு, நிர்வாக இயக்குநர் கி.சி.அருள்சாமி, முதல்வர் ந.ராஜவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai