சுடச்சுட

  

  ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறையின் சார்பில் தேசிய கணிதவியல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
   விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஆர். பிரேம்குமார், கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஆர். லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தாயம்மாள் பாலிடெக்னிக் முதல்வர் ஜி.விஜயகுமார் பங்கேற்றுப் பேசினார். கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், இந்நிகழ்ச்சியில் பொது அறிவு கணிதம் என்ற தலைப்பிலான விநாடி வினா, உலக வல்லுநர்கள் குறித்த ஓர் பார்வை, இந்திய கணித வல்லுநர்கள் கணிதத்துக்கு ஆற்றிய படைப்புகள் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள், கணிதம் சம்பந்தமான மைம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. மேலும் கணித மேதை ராமானுஜர் நினைவாக கணிதத் துறை மாணவ, மாணவியர் வேப்ப மரம், பாதாம் மரம், புங்க மரங்களை நட்டனர். 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்.
   கல்லூரி வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
   
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai