சுடச்சுட

  

  தாற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்துத் துறைகளிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
   நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தொழிற்சங்க நிர்வாகி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு மாவட்டச் செயலர் வேலுசாமி, பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலர் சிவராஜ் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai