சுடச்சுட

  

  அனைத்துத் தொழில் நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
   தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டம் 1972-இன் படி தொழிலாளர் வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொழிலாளர் நல நிதி சட்டம் பிரிவு 2-இன் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்து அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் தொழிலாளர் நல நிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
   அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை 2017 ஜனவரி 31ஆம் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும் எனத் தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
   ஆண்டுக்கு 30 நாள்களுக்கு மேல் பணியாற்றிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நல நிதியை தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
   தவறினால், தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டப் பிரிவு 28-இன் படி, வருவாய் வரி வசூல் சட்டத்தின்படி, அத்தொகையை அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   நல நிதிக்கான தொகையைச் செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai