சுடச்சுட

  

  நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

  By நாமக்கல்  |   Published on : 23rd December 2016 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. பி.நாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், நல்லிபாளையம், மோகனூர், கொல்லிமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
   மோட்டார் வாகன வழக்குகள் இதன் மூலம் வசூலிக்கப்பட்ட அபராதம், சாராய ஒழிப்பு குறித்த வழக்குகள் குறித்தும் டிஐஜி ஆய்வு செய்தார். எஸ்.பி. எஸ்.மகேஸ்வரன், டி.எஸ்.பி. பொன்.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
   ஆய்வுக்குப் பிறகு டி.ஐ.ஜி. பி.நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.1.59 கோடி மதிப்பிலான பொருள்கள் திருட்டு போய் உள்ளது. இதில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 45 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai