சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரம் வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள்:  ஆட்சியர் தகவல்

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 23rd December 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் இதுவரை ரூ. 50.15 கோடி மானிய நிதியுதவியில் 42 ஆயிரம் வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிட திட்டப் பணிகளை ஆட்சியர் மு.ஆசியா மரியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
   நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொந்தளம், வடகரையாத்தூர் ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைத் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக உருவாக்கும் வகையில், முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்பட 7 மாவட்டங்களை அரசுத் தேர்வு செய்து தனிநபர் இல்லக் கழிப்பறைகளைக் கட்ட உத்தரவிட்டுள்ளது.
   நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளிலும் இல்லங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றில் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத வீடுகளுக்கு ரூ. 12,000 மானிய நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் 2015-16 ஆம் ஆண்டில் 107 கிராம ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   தற்போது 2016-17 ஆம் ஆண்டில் மீதமுள்ள 215 கிராம ஊராட்சிகளில் இதுவரை 30 ஊராட்சிகள், வரும் 2017 மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் மீதமுள்ள 185 ஊராட்சிகளிலும் அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
   இதற்கென கடந்த 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட ரூ. 50.16 கோடி அரசு ஊக்கத்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு, 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
   மேலும் கழிப்பிடம் இல்லாத 56,889 குடும்பங்களில் 25,000 தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் 9,064 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 31,889 கழிப்பிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
   ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கந்தசாமி, ஆர்.சீனிவாசன், உதவிப் பொறியாளர்கள் ஆர்.ரவி, பழனிச்சாமி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி. அமுதஸ்ரீ, பரமத்திவேலூர் ஊராட்சி ஒன்றிய மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், இளஞ்சியம்மாள், பணி மேற்பார்வையாளர்கள் சத்யா, முருகேசன், மாதேஸ்வரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai