சுடச்சுட

    

    பெண் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     நாமக்கல் கணேசபுரம் மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோகன். இவர் நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரவுக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி லதா (55). வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால் வியாழக்கிழமை இரவு அருகில் இருந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது வாயில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தார்.
     தகவலின்பேரில் அங்கு சென்ற நாமக்கல் போலீஸார், உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளதாகவும், தலைமறைவாக உள்ள கணவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தாகவும், வியாழக்கிழமை மாலை இருவருக்குமிடையே நீண்ட நேரம் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. அசோகன்-லதா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளதாகவும், திருமணம் செய்து கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பதாகவும், அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
     
     
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai