சுடச்சுட

  

  அலுவலக உதவியாளர் காலி பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

  By DIN  |   Published on : 24th December 2016 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வரும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப் பணியிடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர) முன்னுரிமை பெற்றவர் என்ற இனச் சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்து நியமனம் செய்யப்படவுள்ளனர்.  
  குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 வயது முதல் 32 வயதுக்கு மிகாமலும், அனைத்து விதவைப் பெண்களுக்கு 18 வயது முதல் 35 வயதுக்கு மிகாமலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
  இப் பணியிடத்துக்கு சுய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல், வயது சான்றிதழின் நகல், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரில் வழங்க வேண்டும்.
  மாவட்ட தேர்வுக் குழுவின் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபருக்கு பணி நியமனம் வழங்கப்படவுள்ளது. இப் பணி இடத்துக்கான விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதி மாலை 4 மணி வரை நேரில் வழங்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai