சுடச்சுட

    

    மாவட்ட ஆயுதப்படையின் ஆண்டு ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அ.பாரி பங்கேற்று, ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை, வாகன தணிக்கை, காவலர்களின் உடைமை பொருள்களை தணிக்கை செய்தார்.
     இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த காவல் துறையினருக்கு வரவேற்பாளர் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அவர், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
     எஸ்.பி. எஸ்.மகேஸ்வரன், கூடுதல் எஸ்.பி. எஸ்.செந்தில், டி.எஸ்.பி.கள் ஏ.ராஜி, என்.கஜேந்திரன், யு.சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai