சுடச்சுட

    

    குமாரபாளையம் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
    குமாரபாளையத்தை அடுத்த நேரு நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (53). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் (54). கூலித் தொழிலாளர்களான இருவரும் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் குமாரபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்மேடு அருகேயுள்ள தனியார் கல்லூரி முன்பாகச் சென்றபோது வாகனம், நிலை தடுமாறிதில் இருவரும் சாலையில் விழுந்தனர்.
    இதில், பலத்த காயமடைந்த அருணாசலம் அதே இடத்தில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சுப்பிரமணி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai