சுடச்சுட

  

  குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 12 சாயப் பட்டறைகள் இடிப்பு

  By DIN  |   Published on : 24th December 2016 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான கலியனூர், ஆவத்திபாளையம், மோடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி இயங்கியதோடு, கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 12 சாயப் பட்டறைகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
  காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரிக் கரையோரங்களில் செயல்படும் சாயப்பட்டறைகள் அதிகளவில் கழிவுகளை வெளியேற்றுவதாகவும், கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து வருவதாகும் மாவட்ட நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் தரப்பில் புகார்  தெரிவிக்கப்பட்டது.  
  இதையடுத்து, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் சாயப் பட்டறைகள் கணக்கெடுக்கப்பட்டு இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கே.ரவிச்சந்திரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் வி.சுவாமிநாதன், பறக்கும் படை பொறியாளர்கள் பழனிச்சாமி, சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
  குமாரபாளையத்தை அடுத்துள்ள கலியனூர், ஆவத்திபாளையம் பகுதியில் 10 அனுமதியற்ற சாயப் பட்டறைகளும், மோடமங்கலம் பகுதியில் 2 சாயப் பட்டறைகளும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டன. இதில், சாயப்பட்டறைகளில் இருந்த சிமெண்ட் தொட்டிகள், சாயமிடும் இயந்திரம், மேற்கூரைகள் உடைத்து சேதப்படுத்தப்
  பட்டன. கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் அனுமதியற்ற சாயப் பட்டறைகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai