சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஏழரை பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்தி வேலூர், பொன்னி நகரைச் சேர்ந்த வேலுசாமி மனைவி லட்சுமி (52). இவர் நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள பெரியசூரம்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வசந்தபுரம் நோக்கி வந்துள்ளார். பெரியசூரம்பாளைம் அருகே உள்ள புளியம்பட்டி அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி லட்சுமி கழுத்தில் இருந்த ஏழரை பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
    இது குறித்து லட்சுமி நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நல்லூர் காவல் துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai