சுடச்சுட

  

  நாமக்கல்லில் ஆசிரியர் தகுதித் தேர்வு வாசிப்பு மையம்

  By DIN  |   Published on : 24th December 2016 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வாசிப்பு மையம் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
  மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குநர் பி.குப்புசாமி குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். கணினி இணைய இணைப்பை கல்லூரி முதல்வர் சி.பெரியசாமி இயக்கி வைத்தார்.
  இந்த வாசிப்பு மையத்தில் மேற்கோள் நூல்கள், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள், போட்டித் தேர்வு பாடக் கருத்து நூல்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மையம் திறந்திருக்கும்.
   ஆசிரியர் பணி நாடுனர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்பவர்கள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்பாடுகளை முதுநிலை விரிவுரையாளர்கள் மு.செல்வம், ந.சுப்ரமணியம் செய்திருந்தனர்.
  விழாவில், மாவட்டத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai