சுடச்சுட

  

  நாமக்கல் நகைக் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

  By DIN  |   Published on : 24th December 2016 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
  கடந்த நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. அவை போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் முன்பு காத்துக் கிடக்கின்றனர்.
  இந்த நிலையில், சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி வருகின்றனர்.
  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நாமக்கல் நகரில் கடை வீதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் வந்தனர். 5 பேர் கொண்ட  குழுவினர் சேலத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறி, கடையில் சோதனையை மேற்கொண்டனர்.
  அதிகாரிகள் நகைக்கடையில் உள்ள கணக்கு மற்றும் இருப்பு குறித்து சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 7 மணிக்குப் பிறகும் நீடித்தது. இந்தச் சோதனையின்போது, கடைகளில் விற்பனையை அதிகாரிகள் நிறுத்தியதுடன், கடைகளில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாள்கள் கடைக்கு வரவும் தடை விதித்தனர்.
  வருமான வரித் துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை நாமக்கல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai