சுடச்சுட

  

  நாமக்கல் எய்ம் செஸ் அகாதெமி சார்பில், பொட்டிரெட்டிப்பட்டி ரங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறுவர், சிறுமிகளுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்  வரும் 25-ஆம் தேதி நடைபெறுகின்றன.
  இதுகுறித்து எய்ம் செஸ் அகாதெமியின் தலைவர் நவீன் வெளியிட்ட அறிக்கை:
  நாமக்கல் எய்ம் செஸ் அகாதெமி சார்பில் வரும் 25-ஆம் தேதி பொட்டிரெட்டிபட்டி ரங்கேஸ்வரா கல்லூரியில் சிறுவர், சிறுமிகளுக்கான செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. நாமக்கல்லைச் சேர்ந்த தேசிய செஸ் நடுவர்கள் ஐயப்பன், ஆதாயம் ஆகியோர் நடுவர்களாக செயல்படுகின்றனர். 10, 16 வயது மாணவ, மாணவிகளுக்கு என இரண்டு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெறும். 25-ஆம் தேதி மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு பரிசாக கேடயமும், பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. தொடரின் மொத்த பரிசுத் தொகையின் மதிப்பு ரூ. 25,000, லீக் முறையில் மொத்தம் 5 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் வரும் 24-ஆம் தேதிக்குள் நுழைவு கட்டணமாக ரூ. 200-ஐ செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9488039199, 9994644945  என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை ரங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai