சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இச் சரகத்துக்கு உட்பட்ட 6 காவல் நிலைய கோப்புகளை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஏ.பாரி வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.
  பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்தில் வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், நல்லூர், வேலகவுண்டம்பட்டி மற்றும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 6 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு கோப்புகளை ஆய்வுசெய்தும், காவலர்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
  மேலும் காவல் துறையினர் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். முன்னதாக, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வளாகத்தில் மரக் கன்றுகளையும் நட்டு முறையாக பராமரிக்கும்படி உத்தரவிட்டார். ஆய்வின்போது, நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai