பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் பூக்களின் விலை சரிவு
By DIN | Published on : 24th December 2016 07:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பரமத்தி வேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் அண்ணாநகர், கபிலர்மலை, பரமத்தி, எல்லைமேடு, கரசப்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய சோழிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் விடுகின்றனர்.
பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 1500-க்கும், முல்லைப்பூ (ஊசி மல்லி) கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும் ஏலம் போயின. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், முல்லை (ஊசி மல்லி) கிலோ ரூ.500-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.80-க்கும் ஏலம் போயின. தற்போது விசேஷ காலம் ஏதும் அதிகம் இல்லாததால், பூக்களின் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.