சுடச்சுட

  

  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
  விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை வகித்தார். அணி அமைப்பாளர் சாம்சம்பத் முன்னிலை வகித்தார். துணை அமைப்பாளர் நாசர் பாஷா வரவேற்றார். விழாவில், நாமக்கல் மாவட்ட முதன்மை குரு பிரான்சிஸ், ஆயர் சாந்தகுமாரன், சேந்தமங்கலம் போதகர் ஆன்ட்ரூஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் மாயவன், சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் நக்கீரன், நாமக்கல் நகரப் பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கணேசன், மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் ஷேக் நவீத் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். விழாவில், கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
  மாணவரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராணா ஆனந்த், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சரவணன், ரவீந்திரன், அருள்செல்வன், இளங்கோவன், பூபதி, ஈஸ்வரன், ரவிச்சந்திரன், சார்பு அணியினர் மார்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  துணை அமைப்பாளர் இம்ரான் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai