சுடச்சுட

  

  ராசிபுரம் வழக்குரைஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க 2017-18ஆம் ஆண்டுக்காகன நிர்வாகிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு வழக்குரைஞர்கள் பி.காமராஜ், ஏ.நடராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மொத்தமுள்ள 82 வாக்குகளில் பி.காமராஜ் 64 வாக்குகள் பெற்று, தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட பிற நிர்வாகிகள் விவரம்:
  இச் சங்கத்தின் செயலாளராக என்.செல்வகுமார், பொருளாளராக பி.ரவிக்குமார், துணைத் தலைவராக ஆர்.சரவணன், இணைச் செயலாளராக பி.ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.கே.டி.தங்கதுரை, எம்.ராஜ்குமார், எஸ்.ஆறுமுகம், எம்.ரமேஷ்குமார், என்.குமரவேல், எஸ்.பி.சிவக்குமார், கே.சக்திவேல், கே.வேலுசாமி, பி.மோகன்குமார், பி.மணிகண்டன்  உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
  தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி.காமராஜ் தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai