சுடச்சுட

    

    கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

    By DIN  |   Published on : 25th December 2016 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உள்ள காந்தி மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார். இயக்குநர்கள் சிவா,வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இயேசுபிரானின் பிறப்பை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவ, மாணவியர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், இனிப்புகள் வழங்கினர்.
    கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியை கலாவதி செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai