சுடச்சுட

  

  குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களில் 402 குழந்தைகளுக்கு கல்வி

  By DIN  |   Published on : 25th December 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களில் 402 குழந்தைகள் பயின்று வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
  நாமக்கல் மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட டி.வி.எஸ்.மேடு, ஆவரங்காடு, எலந்தகுட்டை, வெப்படை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  அப்போது அரசு மூலம் வழங்கப்படும் உணவு, உடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கிறதா? என குழந்தைகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
  நாமக்கல் மாவட்டத்தில் இண்டஸ் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிறப்பு மையங்களிலும் மற்றும் முறைசார் பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு உயர்கல்வி பயிலும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
  மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் பள்ளிபாளையத்தில் 11, குமாரபாளையத்தில் 3, எருமப்பட்டியில் 2, திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்திவேலூரில் தலா ஒன்று என மொத்தம் 19 தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  சிறப்புப் பயிற்சி மையங்களில் 402 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவற்றில் 116 மாணவ, மாணவியர் முறைசார் பள்ளிகளில் மேற்படிப்பிற்காக சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர்.
  ஒரு மாணவர் மருத்துவக் கல்வியும், ஒரு மாணவர் விவசாய கல்வியும், 20 மாணவ, மாணவியர் பொறியியல் கல்வியும், 60 மாணவ, மாணவியர் கலை மற்றும் அறிவியல் கல்வியும், 20 மாணவ, மாணவியர் பட்டயத் தொழில் கல்வியும், 3 மாணவ, மாணவியர் தொழிற்பயிற்சி கல்வியுமாக மொத்தம் 105 மாணவ, மாணவியர் உயர்கல்வியும் பயின்று வருகின்றனர். இவர்களில் 57 மாணவ, மாணவியர் உயர்கல்வி முடித்து பல்வேறு பணிகளில் உள்ளனர். மீதமுள்ள 48 மாணவ, மாணவியர் உயர்கல்வி பயின்று வருகின்றனர் என்றார்.
  ஆய்வின்போது தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் அ.போ.அந்தோணி ஜெனிட், ஒருங்கிணைப்பாளர் தனபாக்கியம் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai