சுடச்சுட

  

  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா வரும் 28-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. சுவாமிக்கு 54,000 வடைமாலை சாற்றி வழிபாடு நடைபெறவுள்ளது.
  நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
  கோயிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு விழா வரும் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 5 மணி முதல் 10 மணி வரை 54,000 வடை மாலை சாற்றி அலங்காரம், 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 1 மணிக்கு சிறப்பு அலங்காரம், 4 மணிக்கு தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.
  மேலும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
  விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செ.மங்கையர்க்கரசி முன்னிலையில் உதவி ஆணையர்கள் ச.கிருஷ்ணன், பெ.ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai