சுடச்சுட

  

  சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி அனைத்து சமையல் எரிவாயு நிறுவன முகவர்கள், விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள் ஆகியோர்களுடன் குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
  இக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் 28-ஆம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி தலைமை வகிக்கிறார்.
  சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்து வடிவில் இரண்டு பிரதிகளில் அளிக்க வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai