சுடச்சுட

  

  ராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
  இதில் நகர திராவிடர் கழகம் சார்பில் பாரதிதாசன் சாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு, பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
  நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா, நகர அமைப்பாளர் பாலகிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் முன்னனி பொறுப்பாளர் முத்துலட்சுமி, கோல்டன் நற்பணி மன்றத் தலைவர் நா.குபேர்தாஸ், கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.பூபதி, மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் 43-ஆவது வீர வணக்க நாள் நிகழ்ச்சி, கட்சியின் ராசிபுரம் நகரச் செயலர் வீர.ஆதவன் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டத் துணைச் செயலர் ஆ.நிலவன், வெ.நீதிநாயகம், நா.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai