சுடச்சுட

  

  தேசிய அளவிலான டென்னிஸ்: பாவை பள்ளி மாணவிக்கு வெண்கலம்

  By DIN  |   Published on : 25th December 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 2016-17 கல்வி ஆண்டுக்கான 62-ஆவது தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி மத்தியப்பிரதேசம் திவாஸில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் பாவை பள்ளி மாணவி எஸ்.சுபிக்ஸா கலந்து கொண்டார். சுமார் 12 அணிகள் பங்குபெற்ற இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் நாமக்கல் பாவை வித்யாஷ்ரம் பள்ளி மாணவி எஸ்.சுபிக்ஸா தேசிய அளவில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
  வெற்றி பெற்ற பாவை வித்யாஷ்ரம் பள்ளி மாணவி எஸ்.சுபிக்ஸா-வை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், பாவை பள்ளிகளின் இயக்குநர் முனைவர் சி.சதீஷ், கல்வி நிறுவன இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி பரிசளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai