சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
  நாமக்கல் மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழுக் கூட்டம், விவசாய அணித் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலர் சேகர் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலர் சுரேந்திரரெட்டி பேசினார்.
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்ய அரசு கூட்டுறவு சேகோ ஆலையை நிறுவ வேண்டும், குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
  குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளை கிணறுகள் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
  மாநில செயற்குழு உறுப்பினர் அக்ரி இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பரமசிவம், வெங்கடாசலம், வடிவேல், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai