சுடச்சுட

    

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி மற்றும் விடுதி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
    கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.திலகர் தலைமை வதித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்கலைக்கழகத் தேர்வுகளில் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், நாட்டு நலப் பணித் திட்டத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
    இளங்கலை படிப்பில் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பிரியா, முதுகலை படிப்பில் முதல் இடம் பிடித்த மாணவி புன்னகையரசி ஆகியோருக்கு பல்கலைக்கழக விருதுகளை ஆட்சியர் வழங்கினார்.
    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் எல்.குணசீலன், விடுதிக் காப்பாளர் பொன்னுதுரை ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். கல்லூரி மாணவர் மன்ற துணைத் தலைவர் கே.எம்.பழனிவேல் வரவேற்றார். இறுதியாண்டு மாணவர் ஜெ.மதியழகன் நன்றி கூறினார். விழா நிறைவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai