Enable Javscript for better performance
நாளை நாமக்கல்லில் பாஜக பயிற்சி முகாம்: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நாளை நாமக்கல்லில் பாஜக பயிற்சி முகாம்: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை பங்கேற்பு

    By DIN  |   Published on : 25th December 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒரு ஆண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு நேரம் தரும் முழு நேர ஊழியர்களுக்கான மாநில பயிற்சி முகாம் வரும் 26, 27 மற்றும் 28-ஆம் தேதி நாமக்கல் பாவை மஹாலில் நடைபெறவுள்ளது என பாஜக மாவட்ட பொதுச்செயலர் பி.முத்துக்குமார் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
    இதில் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை செüந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர்கள் கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai