Enable Javscript for better performance
மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.11 ஆயிரம்- Dinamani

சுடச்சுட

    

    மரவள்ளிக் கிழங்கு கடந்த வாரம் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில் நிகழ்வாரம் ஆயிரம் ரூபாய் அதிகரித்து ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
    பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    இந்தப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது. நிகழ்வாரம் சனிக்கிழமை டன் ஒன்று ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனையானது. மரவள்ளிக் கிழங்கின் வரத்துக் குறைந்துள்ளதால் மரவள்ளிக் கிழங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai