சுடச்சுட

    

    ராசிபுரம் நகர அதிமுக சார்பில், அக்கட்சியின் நிறுவனர் மறைந்த எம்ஜிஆர் நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
    இதையடுத்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் எம்ஜிஆர் முழு உருவ சிலைக்கு அதிமுக நகரச் செயலர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் திரளான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் நகரின் பல்வேறு வார்டுகளிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அந்தக் கட்சியினர் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai