சுடச்சுட

  

  அட்மா திட்டத்தின்கீழ் கொல்லிமலை வட்டாரத்தில் நெல் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி

  By ராசிபுரம்,  |   Published on : 26th December 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொல்லிமலை வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் நிர்வாக பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுப்ரமணியம், ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சியளித்தார்.
   நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் அழகுதுரை, உழவியல் சார்ந்த தொழில்நுட்ப செய்திகள் மற்றும் உயர் விளைச்சல் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.
   பயிற்சியில் வாசலூர்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார அட்மா தொழில்நுட்ப அலுவலர்கள் சுரேஷ், பிரபு ஆகியோர் செய்திருந்தனர்
   மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி ஒதுக்கீடு பயிற்சி: கொல்லிமலை வட்டாரத்தில் தானம் அறக்கட்டளை மற்றும் வேளாண்மைத் துறையின் சார்பாக சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டின்படி அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி மற்றும் வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
   வேளாணமை உதவி இயக்குநர் ஆர்.சுப்ரமணியம் கலந்துகொண்டு வேளாண் விளைப்பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் பற்றியும், முறையாக சந்தைப்படுத்துதல் பற்றியும் விளக்கமளித்தார்.
   நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் அழகுதுரை, அறுவடை முன்செய் நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் கொல்லிமலையில் விளையும் சிறுதானியப் பயிர்களின் மதிப்புக் கூட்டுதல் தொடர்பான தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். வேளாண்மைத் துறையின் திட்டசெயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், மானிய விவரங்கள் பற்றியும் வேளாண்மை உதவி அலுவலர் செல்லதுரை விளக்கினார்.
   திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், ராஜேஷ், சுரேஷ் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai