சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே கீரனூர் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கணித மேதை ராமானுஜன் 129-ஆவது பிறந்த தினம் அண்மையில் நடைபெற்றது.
   இதற்கான விழாவில் பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் டேனியல் அற்புதராஜ் வரவேற்றார். பள்ளி நிர்வாக அலுவலர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கணிதத் துறை இயக்குநர் ரவி, வேதியியல் துறை இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று, ராமானுஜரின் கணித அறிவுத்திறன், ஆற்றல், அவரது சிறப்புகள் போன்றவை குறித்து விளக்கிப் பேசினர்.
   விழாவினையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு ராமானுஜனின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கணித வளர்ச்சியில் ராமானுஜனின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, ராமானுஜன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் கவிதைப் போட்டி, அவரது உருவம் குறித்த ஓவியப் போட்டி போன்றவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
   பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராமானுஜன் உருவப் படத்துக்கு மரியாதை செய்தனர். விழாவையடுத்து, நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன், தலைவர் ஜி.வெற்றிச்செல்வன், செயலர் பாலசுப்பிரமணியம், இணைச் செயலர் ஆர்.யு.சிற்றரசன், பொருளாளர் பழனிவேல், தாளாளர் ஜி.விஜய், இயக்குநர்கள் துரைசாமி, தாசபிரகாசம், கணிதத் துறை தலைவர் கணேஷ்குமார் உள்ளிட்டோர் பாராட்டி பரிசளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai