சுடச்சுட

    

    குமரமங்கலத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம்

    By நாமக்கல்,  |   Published on : 26th December 2016 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     கடந்த 1968-ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்கள் 44 பேர் ஒரே வீட்டில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை நினைவு கூரும் விதமாக நினைவு தின நிகழ்ச்சி குமரமங்கலம் பிரிவு சாலை, பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
     கிளைச் செயலர்கள் கே.அய்யாதுரை, சி.சுந்தரம் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலர் எஸ்.சுரேஷ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். காப்பீட்டு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தங்கவேலு, கிளை நிர்வாகிகள் சுந்தரம், சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai