சுடச்சுட

    

    சிந்திக்கத் தெரிந்த தலைமுறையை உருவாக்க வேண்டும்: முன்னாள் எஸ்.பி. பேச்சு

    By ராசிபுரம்,  |   Published on : 26th December 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இன்றைய மாணவர்களை சிந்திக்கத் தெரிந்த தலைமுறையாக உருவாக்க வேண்டும் என முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி குறிப்பிட்டார்.
     ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைவர் ஜி.வெற்றிசெல்வன் வரவேற்றார். பள்ளிகளின் நிறுவனர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார்.
     திருச்சி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். விழாவில் அவர் பேசியது: சமுதாயத்தில் நம்மை உயர்த்தும் வல்லமை கல்விக்கு உண்டு என்பதை உணர்ந்து மாணவர்கள் அதைப் புரிந்து படிக்க வேண்டும். உலக தரவரிசை பட்டியலில் எந்த இந்திய கல்வி நிறுவனங்களும் இல்லை. நாட்டில் 80 சத பொறியியல் பட்டதாரிகளும், 90 சதம் கலை பட்டதாரிகளும் முறையான பயிற்சி பெற்றவர்களாக இல்லை. சிந்திக்க தெரிந்த தலைமுறையை உருவாக்க வேண்டும். இந்திய நாட்டிற்கு தற்போதைய தேவை வெற்றியாளர்கள் அல்ல. நல்ல பண்பாளர்களே. இணையதளம், செல்போன் போன்ற தொழில்நுட்பத்தால் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
     இதைத் தொடர்ந்து தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
     விழாவில் நாட்டுப்புற கலை, தெருக்கூத்து, நாடகம், மேற்கத்திய நடனம் போன்ற மாணவர்களின் வண்ணமிகு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிகளின் செயலர் பாலசுப்பிரமணியம், இணைச் செயலர் ஆர்.யு.சிற்றரசு, பொருளாளர் பழனிவேல், தாளாளர் ஜி.விஜய், இயக்குநர்கள் கே.சந்திரசேகரன், தாசப்பிரகாசம், பழனிவேல், ரவி, மாரிமுத்து, தலைமையாசிரியர்கள் சாம்டேனியல் அற்புதராஜ், பிரபு, ஜெ.சுதர்சனா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai