சுடச்சுட

  

  திருச்செங்கோடு தேசிய சிந்தனைப் பேரவை சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆத்மா சாந்திக்காக மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
   திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேசிய சிந்தனைப் பேரவைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தொழிலதிபர் குமரவேல் மோட்ச தீபத்தை ஏற்றி வைத்தார். விஸ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்வரன், பாஜக மாவட்ட செயலாளர் மதியழகன், நகர தலைவர் ரஜினிகாந்த், ஒன்றியத் தலைவர் ரமேஷ், தர்ம ரக்ஷ்ண சமிதி மாவட்ட செயலாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்று ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இரண்டு நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில பாரத துறவியர் பேரவை உறுப்பினர் மயில் முருகேஷ் சுவாமிகள் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai