சுடச்சுட

  

  நாமக்கல், குமாரபாளையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  By நாமக்கல் / குமாரபாளையம்,  |   Published on : 26th December 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல், சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.
   நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஏ.ஜி சபையில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்குத் தலைமை போதகர் நாதன் தலைமை வகித்தார். குழந்தை ஏசு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
   விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் சபைக்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். காலை 5 மணிக்குத் தொடங்கிய சிறப்புப் பிரார்த்தனை 8 மணி வரை நடைபெற்றது.
   மேலும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், நாமக்கல், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள ஆர்சி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. இதில் குழந்தை ஏசு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
   இந்த சிறப்புப் பிரார்த்தனையில் நாமக்கல் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளானோர் பங்கேற்றனர். இதேபோல் நாமக்கல், சுற்றுப்புற பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.
   குமாரபாளையத்தில்...
   குமாரபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   இயேசு பிறந்த தினம் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு குமாரபாளையம் சி.எஸ்.ஐ. தேவாலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
   இதில், குடும்பத்துடன் புத்தாடை அணிந்து வந்த கிறிஸ்தவர்கள் உற்சாகமாய் பங்கேற்றனர். மேலும், குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயம், வேதாந்தபுரம் சி.எஸ்.ஐ. இம்மானுவேல் விரிவாக்க திருச்சபை, சடையம்பாளையம் இயேசு பேராலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
   
   
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai