சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வெற்றிலை விலை சரிவு

    By பரமத்தி வேலூர்  |   Published on : 26th December 2016 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலச் சந்தையில் வெற்றிலைகள் குறைந்தவிலைக்கு ஏலம் போனது.
     பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6,000-க்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 4,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.3,000-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் மார்) ரூ. 2,000-க்கும் ஏலம் போனது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.4,000-க்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 3,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 2,000-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.1,300-க்கும் ஏலம் போனது. வெற்றிலையின் வரத்து அதிகரித்துள்ளதால் வெற்றிலையின் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai