சுடச்சுட

    

    மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 600 மாணவர்கள் பங்கேற்பு

    By நாமக்கல்  |   Published on : 26th December 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 600 மாணவர்கள் பங்கேற்றனர்.
     தமிழ்நாடு மாணவர் ஒலிம்பிக் சங்கம் சார்பில், 3-ஆவது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றன. நாமக்கல் நவோதயா சீனியர் செகன்டரி பள்ளியில் சனிக்கிழமை ரிங் ரேஸ் போட்டிகளும், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் ஞாயிற்றுக்கிழமை ரோடு ரேஸ் போட்டிகளும் நடைபெற்றன.
     இதில் ரிங் 1, 2 மற்றும் 3 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகள் மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
     போட்டிக்கான ஏற்பாடுகளை சங்க மாநிலச் செயலாளர் சரண்யா ரவிச்சந்திரன், பொருளாளர் விஜயக்குமார், துணைச் செயலாளர் அசோக்குமார் அகியோர் செய்திருந்தனர்.
     இந்த மாநில அளவிலான போட்டிகளில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai