சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே தாளம்பள்ளத்தில் பழைய டயர்களை ரீடிரேடிங் செய்யும் ரப்பர் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
   ரப்பர் ஆலையால் அப்பகுதி முழுவதும் ரப்பர் வாடை வீசி வரும் நிலையில் ஆலையின் ஒரு பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ரப்பர் கழிவுகளில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் வீடுகளில் புகை படர்ந்து துர்வாடை வீசியது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த தீவிபத்தால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai