சுடச்சுட

    

    வதந்தியால் 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வைத்துள்ளவர்கள் அச்சம்

    By நாமக்கல்,  |   Published on : 26th December 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனப் பரவி வரும் வதந்தியால் அதைச் சேமித்து வைத்துள்ளவர்கள் மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
     இந்த வதந்தி சில நாள்களாக பரவி வருகிறது. அரசு, தனியார் பேருந்துகள், கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இந்த நாணயத்தை வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களும், வியாபாரிகளும் கைவசம் இருந்த 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் படையெடுத்தனர்.
     இந்த நாணயங்கள் செல்லாது என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வராத நிலையில், வங்கிகளுக்கு மொத்தம், மொத்தமாக நாணயங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சிலர் ரூ.5,000 ரூ.10,000 தொகைக்கு 10 ரூபாய் நாணயங்களை எடுத்துச் சென்றனர்.
     இதனால் வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. சில வங்கிகளில் குறைந்த அளவு 10 ரூபாய் நாணயங்களைக் கூட வாங்க மறுத்தனர். இதனால் இந்த நாணயங்களை மாற்றும் முயற்சியில் பொதுமக்கள் தினமும் அல்லல்பட்டு வருகின்றனர்.
     இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியது, புதிதாக சில மாறுதல்களுடன் 10 ரூபாய் நாணயங்கள் அச்சடித்து வர உள்ளதாக தகவல் உள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதில் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை. பணப் புழக்கத்துக்காகவும், சில்லறை தட்டுப்பாட்டைப் போக்கவும்தான் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இவற்றை சேமித்து வைத்துக் கொண்டு, மீண்டும் வங்கிக்கே மொத்தமாக கொண்டு வந்து கொடுப்பதால் பயனில்லை. அவற்றை தொடர்ந்து புழக்கத்தில் விட வேண்டும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai