சுடச்சுட

  

  வாஜ்பாய் பிறந்த நாள் விழா: ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு

  By நாமக்கல்  |   Published on : 26th December 2016 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பாஜக சார்பில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
   விழாவுக்கு நகரத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகரப் பொதுச் செயலர் சிம்பு பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
   விழாவில் மாவட்ட பொதுச்செயலர் முத்துக்குமார், வணிகப் பிரிவு தலைவர் பழனியப்பன், பிரசார பிரிவு தலைவர் மணி, அறிவுசார் பிரிவு தலைவர் தனசேகரன், நகரப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai