சுடச்சுட

  

  வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் கைது: 33 பவுன் பறிமுதல்

  By குமாரபாளையம்,  |   Published on : 26th December 2016 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றவரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
   குமாரபாளையம் பூலக்காடு, கணபதி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (55). கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மனைவி அனுராதாவுடன் சென்னைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.
   இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கெüரி திரையரங்கு அருகே குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
   விசாரணையில், அவர் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த நாகராஜ் (28) என்பதும், பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புள்ளதோடு, கணபதி நகரில் குணசேகரன் வீட்டில் நகைகளைத் திருடிச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai