சுடச்சுட

    

    வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்: 50 பேர் மீது வழக்கு

    By ராசிபுரம்,  |   Published on : 26th December 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர்பந்தல்காடு பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் தண்ணீர்பந்தல்காடு பகுதியில் வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்து நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போது மல்லியகரை-ஈரோடு வரையில் நான்கு வழிச்சாலை திட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அந்தப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் சாலை விபத்தில் மூதாட்டி ஒருவர் காயமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் உடனே வேகத்தடை அமைக்க வேண்டுமென பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன், வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சசிகுமார் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. பின்னர் இது தொடர்பாக 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai