சுடச்சுட

  

  ஊழல் கட்சிகள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் அறிவித்துள்ளன: தமிழிசை சௌந்திரராஜன்

  By நாமக்கல்,  |   Published on : 27th December 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு ஊழல் கட்சிகள் இணைந்து, ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் அறிவித்துள்ளன என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் குற்றம் சாட்டினார்.
   தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் பாவை மஹாலில் பாஜக சார்பில் அக் கட்சியினருக்கு மாநில அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த முகாமை அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தொடக்கி வைத்தார்.
   முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பாஜக தகுதியான கட்சி. தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையே மாற்றுக் கட்சியாக பாஜகவை தமிழக மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். அதற்கான உத்வேகமான பணிகளில் ஈடுபட்டுள்ள இக் கட்சி, தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வர்தா புயல் வருவதற்கு முன்னதாக அதிக அக்கறை எடுத்து மத்திய அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டது.
   ஜல்லிக்கட்டு நடத்த அனைத்துப் பணிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்த பிறகு, காங்கிரஸ் கட்சியும் அதில் கலந்துகொள்ளும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஊழல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டம் அறிவித்துள்ளதில் வியப்பில்லை. அரசியல் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த இந்தப் போராட்டம் நடத்துகின்றனர். திமுக நடத்தும் இந்த போராட்டம் தேவையற்றது.
   ஊழலற்ற நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தக் கூடிய கட்சியையே மக்கள் விரும்புகின்றனர். ஜனநாயக முறைப்படி அதிகாரப்பூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். போயஸ் தோட்டத்துக்கு காவல் துறையினர் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது வரவேற்புக்குரியது.
   தமிழகத்தை ஊழலற்ற, நேர்மையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பாஜகவால் தான் முடியும். எந்த சுய லாபத்துக்காகவும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படவில்லை. புறவழியில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை என்றார்.
   இப் பயிற்சி முகாம் வரும் 28-ஆம் தேதி வரை நாமக்கல்லில் நடைபெறுகிறது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai