சுடச்சுட

  

  குடியிருப்புப் பகுதியில் கழிவு நீர்க் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளி மேடு பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: இங்கு 150 குடியிருப்புகள் உள்ளன.
   இந்தப் பகுதியில் கழிவு நீர்க் கால்வாய் அமைத்து தரக் கோரி, கடந்த 36 ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எந்த
   பலனும் இல்லை.
   இந் நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டில் பொதுமக்கள் பங்களிப்புடன் கழிவு நீர்க் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு குடியிருப்புப் பகுதியில் உள்ள தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால், கழிவு நீர்க் குழாய் வழியாக கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.
   இதனால், பொதுமக்கள் வீடுகளில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், அருகில் உள்ள பகுதியை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
   எனவே, குடியிருப்புப் பகுதியில் கழிவு நீர் வெளியேற கழிவு நீர்க் கால்வாய் அமைத்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai