சுடச்சுட

  

  காசி விஸ்வநாதர் ஆலய காவிரிக் கரையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் நண்பர்கள் குழு மூலம் அகற்றம்: தினமணி செய்தி எதிரொலி

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 27th December 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலய காவிரிக் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், காவிரி நீர் மாசுபடுவதாகவும், உடனடியாக இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி தினமணியில் கடந்த 20-ம் தேதி வெளியானது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக நண்பர்கள் குழுவினர் முயற்சியால், கழிவு பொருள்கள் கொட்ட முடியாத வகையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
   பரமத்தி வேலூரில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக் கோயில் காவிரி கரை காசிக்கு அடுத்தபடியாக உள்ளதாகவும், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, கோயில் விழாக்களுக்காக புனித நீர் எடுத்துச் செல்வது மற்றும் ஈம காரியங்கள் செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளைச் செய்தால், காசியில் செய்வதற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தினசரி வந்து செல்கின்றனர்.
   வற்றாத காவிரி எனவும் பெயர்பெற்ற இக் காவிரியில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான கட்டடக் கழிவுகள், பழைய துணிமணிகள், குப்பைகள், கோழிக்கழிவுகள் போன்றவை காவிரியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் காவிரி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்று கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து காவிரியைக் காக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
   இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பரமத்தி வேலூர் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் செலவில் கழிவுப் பொருள்களைக் கொட்ட முடியாத வகையிலும், பொதுமக்களும், பக்தர்களும் வந்து செல்லும் வகையிலும் சுத்தம் செய்துள்ளனர். இதனால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai